தெற்குநோக்கிய பயணத்தில் பாரதிய ஜனதா கட்சி

அண்மையில் நடந்து முடிந்த இந்திய அதிபர் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி அதன் அடிப்படைக் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள தொடங்கியிருக்கும் திட்டத்தின் முதல் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருக் கின்றனர்.

நாட்டின் அதிபர், பிரதமர், மக்களவை நாயகர் என மூன்று முக்கிய பதவிகளை இதுகாறும் பாரதிய ஜனதா கைப்பற்றியிருப்பது அந்த வெற்றியை உறுதிப்படுத்தியிருக் கிறது.

நேற்றைய துணையதிபர் தேர்தலில் கட்சி நியமித்துள்ள வெங்கையா நாயுடுவும் வெற்றி பெற்றால், கட்சியின் இரண்டாம் நோக்கமும் நிறைவேறிவிடும் என்று அதே விமர்சகர்கள் உறுதிபடக்கூறியுள்ளனர். இந்நிலையில் தென்னகத்தை நோக்கி விரிவடைந்து பாரதிய ஜனதா மேற்கொள்ளும் நெடுங்காலத் திட்டம் வெற்றி பெறுமா?

இன்று தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் ஓரிடத் தைக்கூட பாரதிய ஜனதா பெறமுடியவில்லை. எதிர்காலத் தில் பாரதிய ஜனதா தென்னகத்தில் பரவலாக இடம்பெற்று எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் இருக்கவேண்டு மானால் அதற்கு நன்றாகத் திட்டமிடக்கூடிய தலைவர் ஒருவர் தென் பகுதியிலிருந்து தேசியத் தலைவராக உரு வாக வேண்டுமென்று கூறுவோரும் உள்ளனர். வெங்கையா நாயுடு தென்னக ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தவர், பல பதவிகளை வகித்தவர்.

இந்தியாவில் நாட்டின் இரு அவைகளும் சேர்ந்துதான் துணை அதிபரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது பொதுவிதி. இந்தியாவின் மேலவையில் 245 உறுப்பினர் களும் மக்களவையில் 545 உறுப்பினர்களும் உள்ளனர். துணை அதிபராக ஒருவர் தேர்வு பெறுவதற்குக் குறைந்தது 393 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இம்மாதம் பத்தாம் தேதி தற்போதைய துணை அதிபர் முகமது ஹமித் அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. தெற்கை நோக்கிப் புறப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட பாரதிய ஜனதா ஆயத்தமாகிவிட்டதை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கவே வெங்கையா நாயுடு பரிந்துரைக்கப்பட்டார் என்று கட்சியின் தேசியத் தலைவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

வெங்கையா நாயுடு 1998ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். 1999ஆம் ஆண்டு கிராமப்புற வளர்ச்சி அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2005ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலை வராகப் பதவி வகித்தவர். சென்ற ஆண்டு மே மாதம், ராஜஸ்தான் மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்வு பெற்றவர் அவர். இந்தியாவின் துணை அதிபர் தேர்தலில் அவர் நிறுத்தப் படுவதற்கு அவர் தென்னகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கிய கூறாக இருந்தது. பாரதிய ஜனதாவும் அதன் நட்புக் கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டுவதாக உத்தரவாதம் அளித்திருந்தன.

வெங்கையா நாயுடுவை எதிர்த்துப் போட்டியிட்டவரும் சாதாரணமானவர் இல்லை. இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் என்னும் இராஜாஜியின் பேரன். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன், வங்காளத்தின் முன்னாள்ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி. அரசியலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருக்கக் கூடிய வெற்றிடத்தை நிரப்ப விரும்புவதாக அவர் கூறியி ருந்தார். அவருக்கு 18 எதிர்க்கட்சிகளின் ஆதரவு உண்டு. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் தென்னகத்தில் விரிவடைந்து நாடு முழுவதும் மிக நேர்த்தியான ஒருமித்த சட்டதிட்டங்களை உருவாக்கும் முயற்சிகளில் பாரதிய ஜனதா ஈடுபடுமென்று கூறப் படுகிறது.

கோபாலகிருஷ்ண காந்தியைப் பொறுத்தவரையில் மக்களுக்கும் அரசியலுக்கும் இடையே இடைவெளி இல்லாத ஒருநிலையை உருவாக்கவே விருப்பம் தெரிவித்துள்ளார். வெற்றி யாருக்கு? தென்னகத்தில் செல்வாக்கைப் பெற விரும்பும் கட்சிக்கா, கோபால கிருஷ்ண காந்திக்கா? இந்நேரம் முடிவு தெரிந்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!