போலிசாரைத் தாக்கிய சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றச்சாட்டு

போலிசார் மூவருடன் ஏற்பட்ட கைகலப்பில் அவர்களைத் தாக்கிய குற்றத்திற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 41 வயதான அன்பழகன் அழகு, போலிஸ் அதிகாரி கெல்வின் டே ஸி பெங்குக்கு கடு மையான காயம் விளைவித்த குற்றத்தை எதிர்நோக்குகிறார். அந்த அதிகாரியின் இடது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட் டது. மேலும் மூத்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கியோக் ஜூங் யின், கான்ஸ்டபிள் ஹுங் யுங் வெய் இருவரையும் காயப்படுத்தி னார் என்ற குற்றத்தையும் அன்பழ கன் எதிர்நோக்குகிறார். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு அங் மோ கியோ அவென்யூ 10ல் நிகழ்ந்தது. தம்மைக் கைதுசெய்ய முயன்ற போலிஸ் அதிகாரிகள் மூவரையும் தடுக்க அவர் வன்முறையைப் பயன்படுத்தினார்.

தலைக்காயங்களுக்காக ஓர் அதிகாரி இன்னும் டான் டொக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரல் எலும்பு முறிந்த மற்றொருவர் குணம் அடைந்து வருகிறார். பொறுப்பற்ற முறையில் நடை பாதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அன்பழகனை போலிசார் தடுக்க முயன்றபோது அவர் தப்பியோட முயன்றார். அவரை போலிசார் பிடித்தபோது அவர்களிடமிருந்து தன்னை விடு வித்துக் கொள்ள அன்பழகன் வன்முறையைப் பயன்படுத்தினார்.

போலிசாருடன் கைகலக்கும் அன்பழகன். படம்: ஃபேஸ்புக்