காட்டில் தீ மூட்டுபவரை சுட இந்தோ. ராணுவம் உத்தரவு

ஜகார்த்தா: இந்தோனீசிய காடு களில் வேண்டுமென்றே தீ மூட்டு பவர்களைக் கண்டதும் சுடும்படி ஜாம்பி மாநிலத்தில் உள்ள இந்தோனீசிய ராணுவ அதிகாரிகள் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். அப்பகுதியில் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் அப்பகுதி மக்கள் பெறும் அவதிக் குள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள் ளன. இந்நிலையில் அதிகாரிகள் முன்னெடுக்கும் முயற்சிகளால் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவது பெரும்பாடாய் உள்ளது. உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதால் காட்டுத் தீயை வேண்டுமென்றே மூட்டுப வரை கண்டதும் சுடும்படி ராணு வம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்தோனீசியாவின் ஐந்து மாநிலங்களில் காட்டுத் தீ காரணமாக அவசரநிலை அறி விக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தீப்பிடித்து எரியும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தோனீசியாவின் துயர்துடைப்பு மேலாண்மை முகவை, அரசாங்கத் தின் பல அமைப்புகளுடனும் ராணுவத்துடனும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுமத்ராவின் தெற்குப் பகுதியிலும் இதுபோன்று அவசர நிலை அறிவிக்கப்பட்டு அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பிறர் நலனைக் கருத்தில்கொள்ளாமல் வேண்டு மென்றே காட்டில் தீ மூட்டுப வர்களுக்கு இந்தப் புதிய உத்தரவு ஒரு கடுமையான எச்சரிக்கை என்று தீயணைப்புப் படைத் தளபதி கர்னல் ரெஃப்ரிஸல் தெரிவித்தார். இந்த உத்தரவு பொறுப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon