லஞ்ச ஊழல்: சீனாவின் வங்கியாளருக்கு 14 ஆண்டுகள் சிறை

ஷங்காய்: சீனாவின் டெவலப்மெண்ட் வங்கியின் மேலாண்மைக் குழுவின் தலைவர் ஒருவர் லஞ்ச ஊழலில் சிக்கியுள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் $520,276 அபராதமும் விதித்துள்ள தாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரி வித்துள்ளது. சீனாவின் மத்திய ஒழுங்கு ஆய்வக ஆணையம் அதன் இணையத் தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதனைத் தெரி வித்தது. யோ ஸே„ங்மின் என்ற அந்த அதிகாரி அவர் பணி செய்த காலங்களில் 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் 3.5 மில்லி யன் யுவான் பணத்தை அவரது சகோதரர் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் லஞ்சமாகப் பெற் றுள்ளார். வங்கியின் சில ஒப்பந்தப் பணிகளுக்காகவும் கடன்கள் வழங்குவ தற்காகவும் அவர் இதுபோன்று லஞ்சம் பெற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த முன்னாள் அதிகாரி விசாரணையின்போது தனது தவற்றை ஒப்புக்கொண்டதோடு குற்றச் சம்பவங்கள் எங்கு, எவ்வாறு நடந்தது என்பதை விளக்கமாகக் கூறி புலன்விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்புத் தந்தார்.

எனவே அவருக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய ஒழுங்கு ஆய்வக ஆணையம் தெரிவித்தது. லஞ்சம் பெற்ற வழக்கில் யோ விசாரிக்கப்பட்டு வருகிறார் என கடந்த ஆண்டு ஜூன் மாதமே சீனாவின் லஞ்ச ஒழிப்புத் துறை அறிவித்திருந்தது. ஓராண்டுக்கு மேல் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் ராணுவம் முதல் நிதித்துறை வரையிலும் நிலவி வரும் லஞ்ச ஊழலைக் களை யெடுப்பதற்கு நாடாளவிய அளவில் கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் முடுக்கிவிட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய அதிபராக பொறுப்பு ஏற்ற கோத்தபய ராஜபக்சேயை அவரது அலுவலகத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர். படம்: டாக்டர் ஜெய்சங்கர் டுவிட்டர்

21 Nov 2019

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

கோலாலம்பூரில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் கெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம். படம்: பெர்னாமா

21 Nov 2019

அன்வார் இப்ராஹிம்: ரகசிய சந்திப்புகள் வேண்டாம்

ஹாங்காங் பலதுறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வெளியே கிடக்கும் கற்களை அப்புறப்படுத்தும் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Nov 2019

ஹாங்காங்: மாவட்ட நிர்வாக மன்றத்தின் தேர்தல் நடைபெற ஒத்துழையுங்கள்