லாட்டரியில் S$8மி. பரிசுத் தொகை வென்ற மலேசிய விற்பனையாளர்

பெட்டலிங் ஜெயா: மலேசியாவில் ‘டா மா சாய் ஜாக்பாட்’ என்னும் லாட்டரி குலுக்கலில் 25.9 மி. ரிங்கிட் (S$8 மி.) பரிசுத் தொகையை வென்றுள்ளார் கோலாலம்பூரை சேர்ந்த 30 வயது விற்பனையாளர் ஒருவர். தான் வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் இடமான கெப்போங்கில் தனது குழந்தைகளின் அடையாள அட்டையில் உள்ள எண்களை வைத்து விளையாடி பெருந்தொகையை பரிசாக வென்றார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ‘டா மா சாய்’ லாட்டரியில் இந்த ஆண்டில் மட்டும் 75 மில்லியன் ரிங்கிட் ஜாக்பாட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Loading...
Load next