நகையுடன் தப்பியோடிய வாடிக்கையாளர்

காஜாங்: மலேசியாவின் காஜாங்கில் உள்ள பண்டார் பாரு பங்கி என்னுமிடத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர், பத்தாயிரம் ரிங்கிட் (S$3,170) மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்தார். இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வாடிக்கையாளர் போல் கடைக்குள் நுழைந்தார். அங்கு விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்கக் காப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி அதன் விலை என்னவென்று கேட்டார். கடைக்காரரோ அந்த நகையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணோ, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இன்னொரு தங்கக் காப்பைக் காட்டி அதை எடுக்குமாறு கூறினார்.

கடைக்காரர் தங்கக் காப்பை கையில் வாங்கிக் கொண்டு இரண்டாவதாக எடுத்த தங்கக் காப்பை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அப்பெண்ணிடமிருந்து வாங்கிய நகையைக் காட்சிப்பெட்டிக்குள் வைத்துவிட்டு வந்து விலைபோடலாம் என்று நகர்ந்த கடைக்காரருக்கு அதிர்ச்சி தரும் வகையில் அந்தப் பெண் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். அவரது வேகத்திற்கு கடைக்காரரால் ஈடுகொடுத்து விரட்டிப்பிடிக்க முடியவில்லை. அக்கடையில் உள்ள கண்காணிப்புக் காணொளிக் கருவியில் அந்தக் காட்சி அப்படியே பதிவாகியிருந்தது. மற்ற கடைக்காரர்கள் விழிப்புடன் இருக்கும்வகையில் அந்தக் காணொளியை கடைக்காரர் தனது ஃபேஸ்புக் இணையத் தளத்தில் பதிவேற்றியுள்ளதாக மலேசிய போலிஸ் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon