‘அக்‌‌‌ஷராவால் அரங்கம் அதிரும்’

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவான, `விவேகம்' இம்மாதம் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு கபிலன் வைரமுத்து திரைக்கதை எழுதியுள்ளார். ‚“விவேகம் படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றி இருக்கிறேன். படத்தின் கதை விவாதத்திலும் திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்றேன். நான் சிறப்பாகப் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் தந்தார். அவரது தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு போகும். “இந்தப் படத்தின் மூலமாக அஜித் சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் உரை யாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வைத் தந்தது.

அவரது தொலைநோக்குப் பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடற்பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் அதிகமாக் கியது. ‘விவேகம்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்ததைவிட காட்சி அமைப்பு கள் அருமையாக அமைந்து உள்ளன. “அக் ஷரா ஹாசன் (படம்) அறிமுக காட்சியில் அரங்கம் அதிரும். கமல் சார் திரையங்கில் அதைப் பார்த்தால் தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதிரடி காட்சிகள், பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும் மனித உணர்வுகள்தான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம். “இப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து 24ஆம் தேதி திரை அரங்கில் பார்க்க மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகிறேன்.” என்றார் கபிலன். தமிழ்ப் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். அவரது நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.