காஜலின் திடீர் முடிவு

தனது நிர்வாகி போதைப் பொருள் விவகாரத்தில் கைதானதால் தனக்குக் கெட்ட பெயர் வரும் என்று கருதி இனி நிர்வாகியே வேண்டாம் என்ற முடிவை காஜல் அகர்வால் எடுத்துள்ளார். தெலுங்கு பட உலகில் போதைப் பொருள் வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட சிலரில் காஜல் அகர்வாலின் நிர்வாகி ரோனி என்பவரும் ஒருவர். இவருடைய வீட்டில் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் காஜல் அதிர்ச்சி அடைந்தார். ‚“ஒருவருடைய தனிப்பட்ட வி ஷயத்தை நான் கவனிக்க முடியாது. ஒருபோதும் நான் சமூகத்துக்கு எதிராக இருக்க மாட்டேன்,” என்றார் காஜல்.