சுடச் சுடச் செய்திகள்

ரகுல் பிரீத் சிங்: திறமையான நடிகைகளை வரவேற்கிறேன்

தெலுங்கு சினிமாவில் நடிக்கும் திறமையான புதிய நடிகைகளை வரவேற்கிறேன் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழ், தெலுங்கில் வர இருக்கும் ‘ஸ்பைடர்’, தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் இவர் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்துள்ள ‘ஜெயஜான கிநாயகா’ படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இதில் அன்பான ஒரு குடும்பத்தின் புத்திசாலி பெண்ணாக நடித்திருக்கிறார்.

இது அவரது திரை உலக பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறார். புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பற்றி ரகுல் பிரீத் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரகுல், ‚“தற்போது தெலுங்கு சினிமாவில் நிவேதா தாமஸ், சாய் பல்லவி ஆகியோர் புதுமுக நடிகைகளாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இதில் நிவேதா நடித்த ‘நின்னகோரி’ படம் பார்த்தேன். சிறப்பாக நடித்து இருக்கிறார். “சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிடா’ படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை. அவரும் சிறப்பாக நடித்திருப்பார் என்று நம்புகிறேன். இவர்களைப் போன்று திறமையான புது நடிகைகளை நான் வரவேற்கிறேன்,” என்று ரகுல் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon