சுடச் சுடச் செய்திகள்

புரோ கபடி லீக்: போராடித் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி

நாக்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அதன் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாசும் பெங்களூரு புல்சும் மோதின. விறுவிறுப்பான இந்த மோத லில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி 10வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாசின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றி புள்ளி களை மளமளவெனச் சேகரித்தது. தமிழ் தலைவாஸ் வீரர்கள் பல முறை ‘ரைடு’க்குச் சென்று வெறுங்கையுடனே திரும்பினர். முதல் பாதியில் 8=23 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலை வாஸ் மோசமான நிலையில் திக்குமுக்காடியது.

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் புதிய வியூகம் அமைத்து துடிப்புடன் செயல் பட்டனர். எதிரணியை ‘ஆல்= அவுட்’ ஆக்கிய அவர்கள் சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். ஐந்து நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 22-30 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி மறுபடியும் ஒரு முறை பெங்களூருவை ‘ஆல்=அவுட்’ செய்து வேகமாக நெருங்கியது. கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் 30-31 என்ற கணக்கில் ஆட்டத்தைக் கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்தச் சூழலில் பெங்களூரு வீரர் ரோகித் குமார் வெற்றிகரமாக ‘ரைடு’ செய்து ஒரு புள்ளி எடுக்க, பதிலடியாக தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சனும் ஒரு புள்ளி எடுத்தார். அதற்குள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்ததால் தமிழ் தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோகித் குமார் 11 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் அணித் தலைவர் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகளும் எடுத்தனர். அறிமுக அணியான தமிழ் தலைவாஸ் அதன் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன் சிடம் தோற்று இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon