கலாட்டாசரே செல்லும் சிட்டியின் ஃபெர்னாண்டோ

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி யின் பிரேசில் நாட்டு ஆட்டக் காரரான ஃபெர்னாண்டோ துருக்கியின் கலாட்டாசரே குழு வில் இணைந்துள்ளார். “சிட்டியுடனான் அனுபவங் கள் இனிமையானவை. என்னை அந்தக் குழுவின் நிர்வாகம் நன்றாகப் பார்த்துக்கொண்டது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி உலகிலேயே ஆக சவால்மிக்க காற்பந்துப் போட்டி என்று கருதப்படுகிறது. “இத்தகைய போட்டியில் வலிமைமிக்க குழுவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி,” என்றார் 30 வயது ஃபெர்னாண் டோ.

Loading...
Load next