சுடச் சுடச் செய்திகள்

5 விக்கெட்: ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்

கொழும்பு: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங்கை முந்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின் (படம்). இந்தியா=இலங்கை அணி களுக்கு இடையிலான இரண் டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இந்தியா, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி அஸ்வினின் அபாரப் பந்து வீச்சால் 183 ஓட்டங்களில் சுருண்டது. அஸ்வின் 16.4 ஓவர்கள் வீசி 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 51 டெஸ்ட்டுகளில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 190 இன்னிங்ஸ் களில் 25 முறை ஐந்து விக்கெட்டுகளும் 5 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 51 போட்டிகளில் 96 இன்னிங்ஸ்களில் 26 முறை ஐந்து விக்கெட்டுகளும் 7 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.

டெஸ்ட் ஆட்டங்களில் ஆக அதிக முறை 5 விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர் அனில் கும்ளே (35). இலங்கைக்கு எதிராக நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இலங்கையின் அதன் முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கைக்கு இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தார். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. மூன்றாவது நாள் முடிவில் இலங்கை இரண்டு விக்கெட்டுகள் இழந்து 209 ஓட்டங்கள் எடுத்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon