10,000 மீ. ஓட்டப்பந்தயம்: ஃபாரா தங்கம்

லண்டன்: உலகத் திடல்தட வெற்றியாளர்கள் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் மூடிசூடா மன்னராக பிரிட்டனின் மோ ஃபாரா தம்மை நிரூபித் துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அவர் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதன் விளைவாக ஃபாரா தொடர்ந்து உலகளாவிய திடல் தடப் போட்டிகளில் பத்தாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டனில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் நாயக னான ஃபாராவின் சாதனையை விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த ஏறத்தாழ 55,000 ரசிகர் கள் கண்டு களித்தனர். உகாண்டாவின் ஜோஷ்வா செப்டேகாய் ஃபாராவுக்குக் கடுமையான போட்டியைத் தந்தார்.

ஒரு கட்டத்தில் ஃபாரா தடுக்கி விழ இருந்தார். கடைசி சுற்றின்போது நிலவிய கடுமையான போட்டியின் காரணமாக ஃபாரா முதலிடம் பிடிப்பாரா என்ற ஐயம் ஏற்பட்டது. இருப்பினும், தமக்கு எதிராக தொடுக்கப்பட்ட சவால்களை முறியடித்த ஃபாரா, போட்டியின் கடைசிக் கட்டத்தில் வேகமாக ஓடி பந்தயத்தை முடித்து வைத்தார். வெள்ளிப் பதக்கத்தை உகாண்டாவின் ஜோஷ்வா செப் டேகாயும் வெண்கலப் பதக்கத்தை பால் தானுய்யும் வென்றனர். ஃபாரா போட்டியை 26 நிமிடங்கள் 49.51 வினாடிகளில் முடித்தார். இதுவே 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கான இந்த ஆண்டின் ஆக வேகமான நேரம். இதுவே ஃபாராவின் இறுதி திடல்தடப் போட்டி என்று கூறப் படுகிறது.

மின்னல் வேகத்தில் ஓடி முதலிடம் பிடித்து மகிழ்ச்சியே உருவாக இருக்கும் மோ ஃபாரா (இடது). படம்: ஏஎஃப்பி