சுடச் சுடச் செய்திகள்

பலரையும் சுண்டியிழுக்கும் இந்திய, மலாய் உணவுகள்

செய்தி, படம்: திமத்தி டேவிட்

புதுவகை ‘கோர்மே’ பரோட்டா, குச்சிகளில் வாட்டப் படும் சாத்தே, நறுமணம் வீசும் பிரியாணி என உள் ளூர் இந்திய, மலாய், கலவை உணவு வகைகளைக் கொண்ட 35க்கும் மேற்பட்ட கடைகள், ‘ஃபீஸ்டிவல்’ எனும் இரண்டு நாள் உணவு விழாவுக்கு வந்தவர் களைச் சுண்டியிழுத்துவருகிறது. மீடியாகார்ப் வசந்தம், சூரியா ஒளிவழிகள் இணைந்து முதல் முறையாக இந்த உணவு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. தேசிய தினத்தை வரவேற்கும் விதமாக இவ்வார இறுதியில் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் நடைபெறும் இந் நிகழ்ச்சியை ஒலி 96.8, வர்ணா 94.2, ரியா 89.7 ஆகிய வானொலி நிலையைங்களைச் சேர்ந்த படைப்பாளர்கள் வழிநடத்தி வரு கின்றனர்.

‘எம்இஎஸ்’ குழுமத்தின் தலைவர் திரு அப்துல் ஜலீல், மீடியாகார்ப் இந்திய மற்றும் மலாய் சமூகப் பிரிவின் தலைவர் டாக்டர் சித்ரா ராஜாராம் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தோடு ‘தே தாரே’ ‘தேநீர்’ ஆற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். மேலும், ‘டமாறு’ இசைக்குழுவின் மேளத்தாள இசையும் ‘சி அனாக் செனி டிக்கிர் பாராட்’ குழுவின் ஆடல் பாடலும் ஒன்றுசேர உணவு விழா நேற்று தொடங் கியது. வசந்தம் ஒளிவழியின் ‘கல்யாணம் 2‘, ‘தள்ளிப் போகாதே’ போன்ற பிரபல நாடகங் களில் நடிக்கும் கலைஞர்களும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘வசந்தம் ஸ்டார் 2017’ கலைத்திறன் போட்டியைச் சேர்ந்த போட்டி யாளர்களும் கலைஞர்களும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர் களை மகிழ்விப்பார்கள்.

தமிழ், மலாய் இரு மொழி ஒளிவழிகளைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்களின் சிறப்பு இசைக் கச்சேரிகளுடன் சமையல் நிபுணர் களான அரிஃபின், பாப் இருவரின் நேரடி சமையல் விளக்கமும் இடம்பெறும். “தேசிய தினத்தை உல்லாசமாகக் கொண்டாடவும் உணவுப்பிரியர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலும் இந்திய- மலாய் சமூகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமல்லாமல் புதிய வகை உணவு வகைகளையும் ருசித்து மகிழும் விழாவாக ‘ஃபீஸ்டிவல்’ அமையும்,” என்று தெரிவித்த டாக்டர் சித்ரா, பாரம்பரிய, கலாசார, வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட உணவை அனைவரும் உண்டு மகிழ்ந்து ஒருங்கிணையும் வாய்ப்பையும் இவ்விழா ஏற்படுத்தித் தருவதாகவும் கூறினார். முதல் முயற்சி என்பதால் இவ்வாண்டு சிறிய அளவில் உணவு விழா ஏற்பாடு செய்யப்பட்டாலும் அடுத்த ஆண்டில் இன்னும் பெரிய அளவில் விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon