இசைகள் சங்கமிக்கும் சில்வர் ஆர்ட்ஸ் 2017

மூத்தோரை ஆதரிக்கவும் கலைகள் மூலம் அவர்களின் நலனைப் பேணிக்காக்கவும் இவ் வாண்டு ஆறாவது முறையாக செப்டம்பர் மாதம் முழுதும் நான்கு வார இறுதிகளில் ‘சில்வர் ஆர்ட்ஸ் 2017’ எனும் தலைப்பில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறது தேசிய கலைகள் மன்றம். இளையரையும் மூத்தோரையும் இணைக்கும் நோக்கத்துடன் தேசிய கலைகள் மன்றம், மூத் தோர் சார்ந்த இசை, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், குறும் பட வெளியீடு, பயிலரங்குகள் என 38 நிகழ்ச்சிகளை 20 இடங் களில் படைப்பதோடு அவற்றில் சுமார் 70 முதியவர்களையும் ஈடுபடுத்துகிறது.

தேசிய நூலக வாரியத்தின் ‘பிளாஸா’, விக்டோரியா அரங்கம், புதிதாக திறக்கப்பட்ட ‘அவர் தெம்பனிஸ் ஹப்’, கலைப் பள்ளி, மூன்று பொது நூல கங்கள் போன்ற இடங்களில் இடம்பெறவுள்ள ’சில்வர் ஆர்ட்ஸ் 2017’ நிகழ்ச்சிகளில் சுமார் 42,000 பேர் கூடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்பாடு செய்யப்படும் 38 நிகழ்ச்சிகளில் 6 நிகழ்ச்சி களுக்கு நுழைவுச்சீட்டுகள் அவ சியம்; குறும்பட வெளியீடு நிகழ்ச்சிகளுக்கு $3, கலை நிகழ்ச்சிகளுக்கு $12 மட்டுமே. மற்றவை இலவசம்.

முஹம்மது ரஃபி. செய்தி, படம்: திமத்தி டேவிட்