முருகனை சிறையில் சந்தித்த நளினி

வேலூர்: மகளின் திருமணம் தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு வேலூர் சிறையில் உள்ள தனது கணவர் முருகனை நேற்று சந்தித்துள்ளார் நளினி. இந்தச் சந்திப்பின் போது இருவரும் உணர்ச்சிமயமாக தங்களுக்குள் பேசிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மகளின் திருமணத்துக்காக ஆறு மாதம் பரோல் கேட்டுள்ளார் நளினி. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முருகனோ சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி கோரியும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் சிறையில் தினமும் ஒருவேளை மட்டுமே உணவு அருந்துவதாகக் கூறப்படுவது குறித்து நளினி அவரிடம் நெகிழ்ச்சியுடன் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

Loading...
Load next