சுடச் சுடச் செய்திகள்

உள்நாட்டிலேயே மக்கள் அகதிகளாக மாறுவர்: கவலைப்படும் பாமக

சீர்காழி: பெட்ரோல் கெமிக்கல் மண்டலத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் உள்நாட்டிலேயே மக்கள் அகதிகளாகும் நிலை ஏற்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கவலை தெரிவித்துள்ளார். சீர்காழியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், நாகையிலும் கடலூரிலும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் கெடும் என்றும், நச்சுக்காற்று பரவி கிராமங்களை விட்டு மக்கள் வெளியேற வேண் டிய கட்டாயம் உண்டாகும் என்றார். இவ்வாறு மக்களை அழித்து, மண்வளத்தினை வீணாக்கி, நிலத் தடிநீரைக் கெடுத்து விவசாயத்தை அழித்து, குடியிருப்புகளை அகற்றி எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது தான் மத்திய அரசின் நோக்கமா? என்றும் மணி கேள்வி எழுப்பினார்.

இத்திட்டத்திற்காக மத்திய அரசுக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க தமிழக அரசு முன் வரக்கூடாது என வலியுறுத்திய அவர், பிற மாநிலங்களில் இத் திட்டம் நுழைய எப்படி அனுமதிக் கப்பட வில்லையோ அதே போல் தமிழகத்திலும் அனுமதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். இத்திட்டத்தால் தமிழகம் பாலைவனமாகும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon