கிரானைட் முறைகேடு: சகாயம் திட்டவட்டம்

சேலம்: கிரானைட் முறை கேடு விவகாரத்தில் தமது விசாரணைப் பணி முடிவடைந்து விட்டது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். இனி இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது தாம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். சேலத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்க ளிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின் படியே கிரானைட் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

“அத்துடன் எனது பணி முடிவடைந்துவிட்டது. இந்த விவகாரத்தில் இனி நீதிமன்றமும் தமிழக அரசும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் சகாயம். தனது விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் தமிழக அரசு உரிய ஊதியங்களை வழங்கிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி கிரானைட் வெட்டி எடுப்பதாக புகார் எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அதிகாரி சகாயம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon