பெட்ரா பிராங்கா அருகே மலேசியாவின் கடற்படைத் தளம்

சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்காவிற்கு ஒரு
கிலோமீட்டர் அருகே மலேசியாவின் ‘மிடல் ராக்ஸ்’ல்
மலேசியா, அதன் கடற்படைத் தளத்தைத் திறந்துள்ளது.
நீர் நில எல்லை பாதுகாப்புக்காகவும் நீர் அறிவியல்
ஆராய்ச்சிக்கும் இத்தளம் பெரிதும் பங்களிக்கும் என்று
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தனது
ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜோகூரின் ஆளும் குடும்பத்தின் முதல் சுல்தான் அபூ
பக்கரின் பெயர் சூட்டப்பட்ட இத்தளம் 19.5 மில்லியன்
வெள்ளி செலவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டப்பட்டு
வந்துள்ளது.
கடற்பாதுகாப்புக்கு இத்தளம் பெரிதும் பங்களிக்கும்
என்றும் சிங்கப்பூர் மலேசியா இரு நாடுகளுக்குமிடையே
பாதுகாப்பு தேவைகளுக்கு இத்தளம் உதவியாக இருக்கும்
எனவும் நம்பப்படுகிறது.
பெட்ரா பிராங்காவை சுற்றியுள்ள நீர் வளங்கள்
மலேசியாவுக்கு சொந்தம் என்று மலேசியா தாக்கல்
செய்துள்ள வழக்கு தொடர்பில் கடந்த சில மாதங்களாக
பெட்ரா பிராங்கா பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்துள்ளது.