மரபுடைமைக் குறியீடு திறப்பு

முன்னோடி தேசிய சேவையாளர் களைக் கௌரவிக்கும் வகையில் பழைய தாமான் ஜூரோங் முகாம் இருந்த இடத்தில் மரபுடைமைக் குறியீடு நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு தாமான் ஜூரோங் கிரீன்ஸ் வட்டாரத்தில் சுமார் 600 தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்களும் முன்னோடி தேசிய சேவையாளர் களும் நேற்று கூடினர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பழைய தாமான் ஜூரோங் முகாமில் சிங்கப்பூரின் முதல் தேசிய சேவையாளர்கள் தேசிய சேவையில் சேர்க்கப்பட்டனர். 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியன்று அந்த முகாமில் 900 தேசிய சேவை யாளர்கள் மூன்றாவது, நான்கா வது சிங்கப்பூர் காலாட்படைகளில் சேர்ந்தனர். 1968ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பழைய தாமான் ஜூரோங் முகாமில் சிங்கப்பூர் பீரங்கிப் படையில் தேசிய சேவையாளர்கள் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற தாமான் ஜூரோங் தேசிய தின விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், முன்னோடி தேசிய சேவையாளர் களைக் கௌரவப்படுத்தவும் அவர்களது தியாகங்களை நினை வில் கொள்ளவும் ஜூரோங் மரபு டைமைப் பாதையின் ஒரு பகுதி யான பழைய தாமான் ஜூரோங் முகாம் மரபுடைமைக் குறியீடு திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முன்பு தாமான் ஜூரோங் கிரீன்ஸ் வட்டாரத்தில் ஜூரோங் டவுன் கார்ப்பரேஷனால் கட்டப் பட்ட ஓர் அறை வீடுகள் கொண்ட ஐந்து மாடிக் கட்டடங்கள் இருந் தன. அவை ராணுவ வீரர்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. “இன்று நாம் அமைதியான செல்வ செழிப்புமிக்க சூழலையும் அனைவராலும் மதிக்கப்படும் தற் காப்புப் படையையும் கொண்டுள் ளோம். இந்த நிலை தலைமுறை தலைமுறையாக சேவையாற்றும் தேசிய சேவையாளர்களின் அர்ப்ப ணிப்பினால் நமக்குக் கிடைத்துள்ளது.

பழைய தாமான் ஜூரோங் முகாமில் மரபுடைமைக் குறியீடு நேற்று திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது