சுடச் சுடச் செய்திகள்

ஆசியான் பங்கு: சிங்கப்பூரை புகழ்ந்து பாராட்டிய சீனா

சீனா- ஆசியான் ஒருங்கிணைப் பாளர் என்ற முறையில் சிங்கப்பூர் சாதகமான, ஆக்ககரமான பங்கு வகிப்பதாக சீனா புகழ்ந்துள்ளது. சீனா=ஆசியான் உறவுகளை முன்னெடுத்துச் செல்வதில் சிங்கப்பூர் ஆற்றும் பணிகளைப் பாராட்டுவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட ஆசியான் மன்றத்தின் அடுத்த ஆண்டுக்கான தலை மைத்துவத்தை ஏற்கத் தயாராகி வரும் அதேவேளை சீனா=ஆசி யான் ஒருங்கிணைப்பாளர் பணி யையும் சிங்கப்பூர் தொடர தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப் பிட்டார். “ஆசியான் தலைமை, சீனா= ஆசியான் ஒருங்கிணைப்பு என் னும் இரு பொறுப்புகளை சிங்கப்பூர் நல்ல முறையில் ஏற்று நடத்த விரும்புகிறோம். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சீனா=ஆசியான் உறவு களை மேலும் வலுப்படுத்துவதற் கான முயற்சிகளில் சிங்கப்பூர் சிறந்த, சாதகமான பங்கு வகிக் கும்,” என்றார் திரு வாங் யி.

‘ஆசியான் சீன நிலையம்’ தொடர்பான ஒப்பந்தம் எற்படுத் தும் நிகழ்வில் பங்கேற்ற சிங்கப் பூர் வெளியுறவு அமைச்சர் விவி யன் பாலகிருஷ்ணன், சீனா- ஆசியான் உறவுகள் சாதகமான பாதையில் பயணிப்பதாகக் குறிப் பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon