மோடி, அமித் ஷாவுக்கு வளையல் அனுப்பி போராட்டம்

பனாஜி: குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை கண்டித்து பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கோவா மகளிர் காங்கிரசார் வளையல்கள் அனுப்பி போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல் வீசப்பட்டது. இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் சிலரை கைது செய்தனர். மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரதீமா கவுடினோ கூறுகையில், “குஜராத்தில் பாஜகவினர் நடத் திய கல்வீச்சு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகை யில் முக்கிய தலைவர்களான பிரதமருக்கும் தேசிய தலைவருக் கும் வளையல்களைக் கொரியரில் அனுப்பி வைத்துள்ளோம். பாஜகவினருக்கு தைரியம் இருந்தால் அரசியல் ரீதியாக ராகுல்ஜியை எதிர்கொள்ளட்டும் பார்க்கலாம்,” எனத் தெரிவித் துள்ளார்.

Loading...
Load next