சுடச் சுடச் செய்திகள்

இந்தியா-சீனாவுக்கு இடையில் விரைவில் பெரிய போர் மூளும்

இந்தியாவின் சிக்கிம் எல்லை அருகே டோக்லாம் பீடபூமியில் சீன ராணுவத்தின் முற்றுகை விரை வில் முழு அளவிலான போருக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று இந்தியாவில் பிறந்த பிரிட்டன் பொருளியல், அரசியல் நிபுணர் மேக்னாட் தேசாய் தெரிவித்து உள்ளார். தென் சீனக் கடல் விவகாரத் தோடு டோக்லாம் முற்றுகையைத் தொடர்புபடுத்திய அவர் பல்வேறு முனைகளில் போர் நடத்தப்படு வதற்கான சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவ்வாறு ஒரு பெரும்போர் மூளும்பட்சத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் என்று அவர் தமது ஆரூடமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாடாளுமன்ற மேலவைக்கு ஒப்பான பிரிட்டனின் பிரபுக்கள் அவை உறுப்பினராக உள்ள திரு தேசாய் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகை யில் இவற்றைக் குறிப்பிட்டார்.

“டோக்லாம் முற்றுகைப் பிரச் சினை பெரிதாகி பிரச்சினை வெடித் தால் அடுத்த ஒரு மாதத்தில் அது போராக மாறிவிடும். இருப்பினும் முழு அளவிலான போர் எப்போது எங்கு மூளும் என்று முன்கூட்டி ஊகிப்பது கடினம். “நான் ஒரு ஜோசியர் அல்ல. அதனால் போர் எப்போது வெடிக் கும் என்று என்னால் ஊகிக்க இயலாது. இருப்பினும் விரைவில் சீனாவுடனான முழு அளவிலான போரை நாம் எதிர்பார்க்கலாம். இந்தியாவோடு அமெரிக்கா கரம் கோர்ப்பதால் அந்தப் போர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானதாக அமையும். “வியப்பை ஏற்படுத்தும் வித மாகக் கிளம்பும் போர் கட்டுப்படுத்த இயலாத ஒன்றாக அப்போது இருக்கும். “மேலும் பல நாடுகளுடன் கொண்டிருக்கும் தற்காப்பு ஒத் துழைப்பு இந்தியாவுக்கு அப்போது கைகொடுக்கும்,” என்றும் திரு தேசாய் தெரிவித்தார்.

டோக்லாம் முற்றுகை வெறும் இந்தியா-சீனா எல்லைப் பூசல் என்று மட்டும் பார்க்கலாகாது. பேச்சுவார்த்தை மூலம் அதற்குத் தீர்வு காண இயல்வது கடினம் என்று கூறிய திரு தேசாய், அதற்கு உதாரணமாக தென் சீனக் கடல் விவகாரத்தை அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடந்த 1962ஆம் ஆண்டு போர் மூண்டது குறிப் பிடத்தக்கது. அப்போதும் எல்லைப் பிரச்சினைதான் போருக்கு வழி வகுத்தது.

இந்தியாவில் பிறந்து பிரிட்டன் பிரபுக்கள் அவை உறுப்பினராக உள்ள மேக்னாட் தேசாய். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon