அமைச்சர் சிவகுமாரிடம் இருந்து ரூ.300 கோடி மீட்பு

பெங்களூரு: கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் டி.கே. சிவகுமாரி டமும் அவரது உறவினர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து அதிக மாக எதுவும் வாய்திறந்து பேசாத அவர், “உண்மை விரைவில் வெளிவரும்,” என்று மட்டுமே தெரிவித்துள்ளார். அமைச்சர் டி.கே. சிவகுமாரின் வீட்டில் கடந்த 4 நாட்களாக நடந்துவந்த வருமான வரி சோதனை நேற்றுடன் நிறைவு பெற்றது.

சிவகுமாரின் உறவினரான பெங்களூரு என்.ஆர். காலனியில் உள்ள சர்மா டிராவல்ஸ் உரிமை யாளர் சுனில்குமார் சர்மாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அவரது வீட்டில் 16 லாக்கர்கள் இருப்பதை அதி காரிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் 10 லாக்கர்களைத் திறந்து அதில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அமைச்சர் டி.கே.சிவகுமார், அவரது உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் இருந்து ரூ.11.43 கோடி, ரூ.4.44 கோடி மதிப்பிலான தங்க நகைகள், முக்கிய சொத்துப் பத்திரங்கள், ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி யுள்ளதாக தகவல்கள் குறிப்பிடு கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையிலும் 4வது நாளாக அமைச்சர் டி.கே.சிவகுமார், மைசூருவில் உள்ள அவரது மாமனார் திம்மையா, சுனில்குமார் சர்மா ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.