வெங்கையா வெள்ளிக்கிழமை துணை அதிபராக பதவியேற்பு

புதுடெல்லி: துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவின் பதவியேற்பு நிகழ்ச்சி வரும் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வெங்கை யாவும் எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில் 98.21% வாக்குகள் பதிவாகின. வெங்கையாவுக்கு 516 வாக்குகளும் கோபால கிருஷ்ண காந்திக்கு 244 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா வெற்றிபெற்றார்.

துணை அதிபராக வெற்றி பெற்றவுடன் வெங்கையா நாயுடுவை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்த அவரது மனைவி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon