கூந்தலைத் துண்டித்துவிடும் சம்பவங்களால் பெண்கள் பீதி

லக்னோ: சூனியக்காரர்களின் மாந்திரீக செயல்பாடுகளால் கூந்தலைத் துண்டித்து விடும் சம்பவங்கள் நடப்பதாக பலரும் நம்பத் துவங்கி இருப்பதால் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது. கூந்தல் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஒரு லட்சம் பணம் நஷ்ட ஈடாக கொடுப்பதாகக் கூறப்பட்ட தால் பிரதாப்கார்க் மாவட்டத்தில் உள்ள லாலு கிராமத்தில் 17 வயது சிறுமியின் குடும்பத்தினர் அவளது தலைமுடியை வெட்டி விட்டுள்ளனர். அரசாங்கம் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு தொகையாக வழங்குவதாக தங்களது உறவினர்கள் கூறியதை நம்பி தங்களது வீட்டில் உள்ள ஒரு சிறுமியின் முடியை அவளது குடும்பத்தினர் வெட்டி விட்டுள்ள னர்.

“நினைவிழந்த சிறுமியை உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனு மதித்து இருந்தனர். குடும் பத்தாரின் செயலை நினைத்து இன்னும் இந்தச் சிறுமி அதிர்ச்சி யில் இருந்து மீளவில்லை,” என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக போலிசார் கூறினர். டெல்லி, ராஜஸ்தான், ஆக் ராவை தொடர்ந்து உ.பி. மாநிலம், அலிகர், புலந்த்ஷஹர், மொரதாபாத் மாவட்டங்களிலும் பெண்களை மயக்கமடையச் செய்து, அவர் களின் கூந்தலைத் துண்டித்து விடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களைச் சார்ந்த பெண்களும் அச்சம் அடைந்துள்ளனர். பெண்களின் இந்தக் குற்றச் சாட்டை மறுத்த காவல்துறை யினரும் மனநல மருத்துவர்களும் ‘இது வெறும் வதந்தியே’ எனக் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கான்னாவுரி மாவட்டம், சங்ரூரில் உள்ள சாந்து கிராமத்தைச் சேர்ந்த மீனா தேவி என்ற பெண் தனது வீட்டில் தூங்கும்போது தனது தலைமுடி வெட்டப்பட்டதை காட்டுகிறார். தான் எழுந்தவுடன் கழிவறைக்கு செல்ல முயன்றபோது தனது தலைமுடி தரையில் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon