சுடச் சுடச் செய்திகள்

வடகொரியாவுக்கு எதிராக தடைகள் தேவைப்படுகிறது

மணிலா: ஏவுகணை சோதனை களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக தடைகள் தேவைப்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறினார். ஆனால் தடைகள் மட்டுமே இறுதித் தீர்வு ஆகாது என்றும் பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் சொன்னார். மணிலாவில் நடந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட் டத்தின் தொடர்பில் நடந்த சந்திப் பின்போது திரு வாங் இவ்வாறு கூறினார். வடகொரியா மீது ஐநா பாதுகாப்பு மன்றம் விதித்துள்ள புதிய தடைகள் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும் அவர் சொன்னார்.

ஐநா நிறைவேற்றிய புதிய தீர்மானம், பேச்சுவார்த்தையில் வடகொரியா மீண்டும் கலந்து கொள்ள வழிவிட்டுள்ளது என்றும் திரு வாங் கூறினார். வடகொரியா மீது புதிய தடைகள் விதிக்க வகை செய்யும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு மன்றம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பதற்றத்தைத் தணிக்க அமைதி வழியிலும் அரசதந்திர ரீதியிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிலைமை மேலும் மோசமா வதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் பொறுப் பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு தரப்பை ஆதரிப்பது அல்லது மற்ற தரப்பை புறக் கணிப்பது என்பது சீனாவால் முடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon