சுடச் சுடச் செய்திகள்

விக்ரமின் புது அவதாரம்

அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘நெருப்புடா’. விக்ரம் பிரபு, நிகில் கல்ராணி ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் நாயகன் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் விக்ரம் பிரபு தான். ‘கபாலி’யால் பிரபலமான ‘நெருப்புடா’ என்பதே தன் படத்தின் தலைப்பாக அமைந்ததில் இவர் மிகவும் பூரித்துப் போயிருக்கிறார். தொடக்கக் காலத்தில் தனது குடும்ப நிறுவனத்தில் (சிவாஜி புரொடக் ஷன்ஸ்) தயாரிப்பு மேலா ளராகப் பணியாற்றிய அனுபவம் விக்ரமுக்கு உண்டு. அப்போது நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டா ராம். அதன் பலனாக தற்போது ‘ஃபர்ஸ்ட் ஆர்ட் டிஸ்ட்’ என்ற பெயரில் சொந்த மாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள் ளார். அதன் முதல் தயா ரிப்பு தான் ‘நெருப்புடா’.

“ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் பணியாற்றி வந்த அசோக்குமார் என்னிடம் கூறிய கதை ரொம்பப் பிடித்திருந்தது. இவர் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் பணியாற்றியவர். “இது முழுமையான பொழுதுபோக்கு படம். தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அறவே போரடிக்காது,” என உத்தரவாதம் அளிக்கிறார் விக்ரம் பிரபு. பிந்து மாதவி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும் சதீஷ், சூரி, வருண் வின்சென்ட், ராஜ்குமார் என மேலும் பலர் உள்ளனர். ‘இவன் வேற மாதிரி’க்குப் பிறகு மீண்டும் விக்ரம் பிரபு படத்துக்கு இசையமைக்கிறார் சத்யா.

நடிகர், தயாரிப்பாளர் என இரு பொறுப்புகளை சமாளிக்க முடிகிறதா?

“தயாரிப்பாளராக உருவெடுத்த பிறகு பொறுப்புகள் அதிகமாகி இருப்பதை உணர்கிறேன். படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டால், அங்கு நடிகர் விக்ரம் பிரபுவைத் தான் பார்க்கமுடியும். என்னை முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்து விடுவேன். “இது என் தந்தையும் பாட்டனாரும் கற்றுக் கொடுத்த பாடம். இயக்குநர் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும் என்று இருவரும் சொல்லி இருக்கின்றனர்.

“அதேபோல் படப்பிடிப்புக்கு முன்பும், அது முடிந்த பின்பும் ஒரு தயாரிப்பாளருக்கு உரிய அனைத்துப் பணிகளையும் செய் வேன். தினமும் நூறு பேருக்கு வேலை, அறுபது நாட்கள் படப்பிடிப்பு, இவற்றுக்குரிய செலவைத் திட்டமிடுவது, தேவைப்படும் தொகையைத் திரட்டுவது என பல்வேறு பணிகள் உள்ளன,” என்று வரிசையாக அடுக்குபவர் இந்தப் புதிய அனுபவம் பிடித்திருக்கிறது என்றும் சொல்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon