உதயநிதி: ரசிகர்கள் மகிழ்ச்சியே முக்கியம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் புதிய படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாம். இம்முறை மலையாள நடிகை நிவேதா பெத்துராஜுடன் ஜோடி சேர்ந்துள்ளார் உதயநிதி. தளபதி பிரபு இயக்கும் இப்படம் விரை வில் திரை காண உள்ளது. முதன்முறையாக கிராமத்து கதை ஒன்றில் நடித்துள்ளார் உதயநிதி. மேலும் இப்படத்தை இவர் தயாரிக்கவில்லை. வேறொரு நிறுவனம் தயாரிக்க, இவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள முதல் படம்.

“ஊருக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று விரும்பும் துடிப்பான இளைஞனாக நடிக் கிறேன். வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார். எங்கள் இருவருக்கும் இடையேயான போட்டி விறுவிறுப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. “படம் முழுவதும் என்னுடனேயே வரும் டைகர் பாண்டி என்ற வேடத்தில் சூரி நடித்துள்ளார். இதுவரை நான் நடித்த படங்களிலேயே இது மாறுபட்ட ஒன்றாக இருக்கும்,” என்று சொல்லும் உதயநிதிக்கு படங்களை இயக்கும் ஆசை அறவே இல்லையாம். நடிப்பு, படத் தயாரிப்பு உள் ளிட்ட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகச் சொல்கிறார்.

தனது படங்களை வெளியிடும் விநியோகிப்பாளர்கள்க, படம் பார்க் கும் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும் என்றும் அதற்கு மேல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் சொல்கிறார் உதயநிதி.

Loading...
Load next