ஒரே நாளில் 10,000 நெய்மார் சீருடை விற்பனை

பாரிஸ்: பார்சிலோனா அணிக் காக கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தவர் பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார். இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் முன்னணி காற்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்= ஜெர்மைன் நெய்மாரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக பாரிஸ் செயின்ட்= ஜெர்மைன் அணி மாற்றுதல் கட்டணமாக பார்சிலோனாவிற்கு 222 மில்லியன் யூரோ கொடுத் துள்ளது. பி.எஸ்.ஜி. அணியுடன் ஐந்து ஆண்டிற்கான ஒப்பந்தம் நேற்று அதிகாரபூர்வமாக கையெழுத்தானது. உடனே நெய்மாருக்கு 10 எண் பொறித்த சீருடைவழங்கப்பட் டது. ஐரோப்பிய கண்டத்தில் ஒரு வீரரின் பெயரில் வீரர் இடம்பிடித்துள்ள கிளப் மட்டுமே சீருடை பிரிண்ட் செய்து வெளியிடப்படும்.

மற்றவர்கள் பிரிண்ட் செய்யக்கூடாது. இந்த சீருடைகளை விற்பனை செய்வ தன் மூலம் கிளப்புகளுக்கு வருமானம் கிடைக்கும். அந்த வகையில் பி.எஸ்.ஜி. நெய்மார் பெயர் மற்றும் எண் பொறித்த சீருடையை பிரிண்ட் செய்து விற்பனை செய்து வருகிறது. முதல் நாளிலேயே இந்த அணி 10 ஆயிரம் சீருடைகளை விற்றுள்ளது. விரைவில் ஒரு லட்சம் சீருடைகளை விற்பனை செய்ய அந்த அணி முடிவு செய்துள்ள தாகத் தெரிகிறது. ஒரு சீருடைக்கு 100 யூரோ விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் யூரோ சம்பாதித் துள்ளது. இப்படியே சென்றால் மார்ச் மாதம் மத்தியில் நெய்மரின் மாற்றுதல் கட்டணமாக 222 மில்லியன் யூரோவை பி.எஸ்.ஜி. அணி சம்பாதித்துவிடுமாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்தப் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது. உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு நல்ல தொடக்கம் கிடைத்ததைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார் ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மத்துல்லா ஷஹீதி (நடுவில்).

26 May 2019

திக்குமுக்காடிய பாகிஸ்தான், இலங்கை

(இடமிருந்து) மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் சயட் சடிக், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ.

25 May 2019

மான்செஸ்டர் சிட்டி குழு உரிமையாளரின் மலேசிய முதலீடு