ஜஸ்டின் கேட்லின் வெற்றி

லண்டன்: உலக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி வாகை சூடிய கையுடன் தடகளப் போட்டிகளி லிருந்து வெளியேறிவிடலாம் என்று காத்திருந்த உசேன் போல்ட்டுக்கு சனிக்கிழமையன்று பேரதிர்ச்சி. அவர் கலந்துகொண்ட 2017 ஆம் ஆண்டு உலக தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவரும் இதற்கு முன் போதைப்பொருள் புழக்கத்திற்காக இருமுறை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டவருமான ஜஸ்டின் கேட்லின் மின்னலெனப் பாய்ந் தோடி வெற்றி வாகை சூடினார்.

போல்ட்டுக்கு அதுமட்டும் அதிர்ச்சி தரவில்லை. கேட்லினுக் குப் பின்னால் அடுத்த நிலையில் மற்றொரு அமெரிக்கரான 21 வயது கிறிஸ்டியன் கோல்மன் வந்ததால் உசேன் போல்ட் மூன் றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். தடகளப் போட்டிகளில் தொடர் வெற்றிகளைக் குவித்த பெருமை யுடன் ஓய்வு பெறலாம் என்று கருதிய உசேன் போல்ட், வழக்கம்போல் 100 மீட்டர் இறுதி ஓட்ட தொடக்கத்தில் மெது வாகவே ஆரம்பித்தார். ஆனால், இதற்கு முன் இந்தப் பின்னடைவை ஓட்டத்தில் சரி செய்ய முடிந்த போல்ட்டால் சனிக் கிழமை நடந்த போட்டியின்போது அதேபோல் சரிக்கட்ட முடியாமல் போனது.

லண்டனில் நடந்த ஆண்களுக்கான உலக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜஸ்டின் கேட்லின், உசேன் போல்ட். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon