சுடச் சுடச் செய்திகள்

அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய சென்னை

சென்னை: பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக சென்னை மாநகரில் போக்குவரத்து நிலை குத்தியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் வந்த வாகனங்கள், கடற்கரை சாலையிலும் இதர பகுதிகளிலும் நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன மோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

கடந்த இரு ஆண்டுகளாக அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அரசுத் தரப்பில் அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது அரசு ஊழியர்களின் குற்றச்சாட் டாக உள்ளது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி கிளம்பிய அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆங்காங்கே போலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டனர். எனினும் அதையும் மீறி 60 ஆயிரம் பேர் திரண்ட னர். கோரிக்கைகளை வலியு றுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெறும் எனவும் அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon