அர்ப்பணிப்பு, உற்சாகம், கொண்டாட்டம்...

அரங்கத்தில் குழுமும் பார்வையாளர் களைப் பல்வேறு அங்கங்கள் உற்சாகப்படுத்தினாலும் அந்த உற் சாகம் இறுதிவரை எள்ளளவும் குறையாமல் பார்த்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங் கேற்கும் ஊக்குவிப்பாளர்கள். பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த இந்த இளம் ஊக்குவிப் பாளர்கள், கைகளை அசைத்தும் பலமொழிகளில் உள்ள தேசப்பற்று பாடல்களைப் பாடியும் கூட்டத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது செய்துகாட்டுகின்றனர். அரங்கத்தினுள் ஆங்காங்கே நின்று கொண்டாட்டத்தின்போது கலகலப்பாகவும் புன்னகை மாறா முகங்களுடனும் இந்த இளம் ஊக்குவிப்பாளர்கள் காணப் படுவது அவசியம்.

வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நிற்க நேர்ந்தாலும் ஆடியும் பாடியும் கொண்டாட்டத்தில் குதூகலத்தை வெளிப்படுத்த அவர்கள் தவறுவதில்லை. ஆயிரக்கணக்கானோரின் முன்னிலையில் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்க மாகத் திகழ்வதில் பெருமிதம் கொள்ளும் அவர்கள், நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் இளையர்கள் நிகழ்ச்சியின் இறுதிவரை உற்சாகத்தைத் தக்க வைப்பதற்குப் பல மாதங்கள் பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றனர் ஊக்குவிப்பாளர்களாக தேசிய தினக் கொண்டாட்டத்தில் இவ்வாண்டு பங்கேற்கும் சஹருவான் ஃபாரிஷா, குகன் பாண்டுரங்கன் ஆகியோர். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் இவர்கள், தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக பலூனால் வடிவங் களை உருவாக்குவதற்குப் பயிற்சி பெற்றுக்கொண்டனர்.

அணிவகுப்பு முன்னோட்டக் காட்சியின்போது கொடியசைத்து பார்வையாளார்களை உற்சாகப்படுத்தும் (இடமிருந்து) குகன் பாண்டுரங்கன், சஹருவான் ஃபாரிஷா. படம்: திமத்தி டேவிட்

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

கடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்