அணிவகுப்பில் கொடி ஏந்தும் கிஷன்

முதன்முறையாக தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன் எடுத்த எடுப்பிலேயே முன்னிலையில் கொடியேந்தி அணிவகுத்துச் செல் வது 25 வயது கிஷன்ராஜ் முருகையாவுக்கு பெருமைமிகு அனுபவமாக அமைந்துள்ளது. ஆகாயப்படையின் 123வது படைப் பிரிவின் துணைத் தலைவர் பதவி வகிக்கும் கிஷன், மூன்று கிலோ எடையுள்ள கொடியை பிரதமர், அதிபர் ஆகிய முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் சுமந்து செல்வது சுலபமானது அல்ல என்றார். “குறிப்பாக, வந்தனம் செய்வதற்குக் கொடியைக் கீழே இறக்க கைகள் வலுவாக இருக்க வேண்டும்,” என்றார் அவர். ஒற்றைக் கையில் கொடியை செங்குத்தாகப் பிடித்துக்கொள் வதுடன் 90 டிகிரிக்கும் சற்று அதிகமான கோணத்தில் கொடியைக் கீழிறக்க ‘புஷ் அப்ஸ்’ போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக கிஷன் கூறினார்.

Loading...
Load next