சுடச் சுடச் செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு; வழக்கறிஞருக்கு $6,000 அபராதம்

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தனது கட்சிக்காரருக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மனத்தளவில் துவண்டுபோன வழக்கறிஞர் ஃபேஸ்புக் பக்கத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து கூறிய வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. 42 வயதான வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கம் கடந்த மே மாதம் 19ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “நீதித் துறையின் உயர் பதவியில் ‘மில்லியன் டாலர்’ சம்பாதிக்கும் நீதிபதிகள் உட்பட அனைவரும் இந்தக்கொடூரமான மரண தண் டனைச் சட்டத்தை கண்டு கொள்ளாமல் சொத்து சேர்ப் பதில் மட்டுமே குறியாக உள் ளனர்,” என்று தனது கருத்தை 22 வரிகளில் பதிவு செய் திருந்தார். நீதித்துறையை இழிவாக பேசிய குற்றத்திற்காக திரு யூஜினுக்கு நேற்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

72.5 கிலோ போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக 32 வயதான முகம்மது ரிட்சுவான் முகம்மது அலியை மே மாதம் 19ஆம் தேதி தூக்கில் இட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன்னதாக 2016 டிசம்பரில் போதைப்பொருள் சட் டத்துக்கு எதிராக தனது வழக் கறிஞர் மூலமாக ரிட்சுவான் தாக்கல் செய்த மனு தோற்றுப் போனது. இதைத் தொடர்ந்து மே மாதம் அவருடைய கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு மரணதண்டணை உறுதி படுத்தப்பட்டது.

இத்தீர்ப்பால் மனவருத்தப்பட்ட வழக்கறிஞர் துரைசிங்கம், ஃபேஸ்புக் பக்கத்தில் நீதித் துறையை அவமதிக்கும் வகை யில் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். நீதித்துறையை இழிவுப் படுத்தி பேசியதற்காக தலை மைச் சட்ட அதிகாரி அலு வலகம் துரைசிங்கத்துக்கு எதிராக ஒரு மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கறிஞர் சங்கத்திலும் புகார் ஒன்று பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து ஜூன் 5ஆம் தேதி துரைசிங்கம் ஃபேஸ்புக்கி லிருந்து தனது கருத்தை நீக் கியதுடன் அதே நாளன்று மன் னிப்பும் கேட்டுக்கொண்டார்.

வழக்கறிஞர் யூஜின் துரைசிங்கம். கோப்புப் படம் வர்த்தகர் மீது ஊழல் குற்றச்சாட்டு

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon