சுடச் சுடச் செய்திகள்

வர்த்தகர் மீது ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் ‘பிபி’ பெட்ரோலிய நிறுவன நிர்வாகி ஒருவருக்கு மொத்தம் 3.95 மில்லியன் யுஎஸ் டாலர் (5.4 மி. வெள்ளி) லஞ்சம் வழங்கியதாக வர்த்தகர் ஒருவர் மீது நேற்று குற்றம் சாட்டப் பட்டது. ‘பசிபிக் பிரைம் டிரேடிங்’ என்ற எண்ணெய் வர்த்தக நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நரான 55 வயது கோ செங் லீ, 19 சம்பவங்களில் ஒவ்வொரு முறையும் ‘பிபி’ கடற்துறை எரிபொருள் நிறுவனத்தின் அப் போதைய வட்டார இயக்குநரான கிளாரன்ஸ் சாங் பெங் ஹோங்குக்கு 100,000 யுஎஸ் டாலர் முதல் 350,000 யுஎஸ் டாலர் வரை லஞ்சம் வழங் கியதாகத் தெரிவிக்கப்பட்டது. 2006 ஜூலைக்கும் 2010 ஜூலைக்கும் இடையே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதே சமயத்தில் லஞ்சம் வாங்கியதாக 52 வயது சாங்கும் மொத்தம் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon