ஹலிமா யாக்கோப்: எனது பணி தொடரும்

அடுத்த மாதம் நடைபெறவிருக் கும் அதிபர் தேர்தலில் போட்டி யிடும் திருவாட்டி ஹலிமா யாக் கோப் தாம் வகித்த நாடாளுமன்ற நாயகர், மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று பிரதமர் லீ சியன் லூங்குக்கு அனுப்பி வைத்த திருவாட்டி ஹலிமா, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர், மசெக மூத்தோர் குழு வின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகும் முடிவையும் வெளிப்படுத்தி னார்.

திருவாட்டி ஹலிமா, வயது 62, நாடாளுமன்ற அலுவலருக்கும் நாடாளுமன்ற துணை நாயகர் சார்ல்ஸ் சோங்குக்கும் கடிதம் எழுதினார். திரு சோங்குக்கு எழுதிய கடிதத்தில் ஒரு புதிய நாடாளுமன்ற நாயகர் நிய மிக்கப்படும் வரை அவரைத் தற்கா லிக நாயகராக இருக்கும்படி கேட் டுக் கொண்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திருவாட்டி ஹலிமா நேற்று முன்தினம் நடைபெற்ற மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி தேசிய தின விருந்தில் பேசியபோது வெளியிட்டார். பிரதமரும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரு மான திரு லீ சியன் லூங்குக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர், நண்பர்கள், அடித்தளத் தலைவர் கள் ஆகியோருடன் மிக ஆழ்ந்து கலந்தாலோசித்த பிறகு, அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டி ருந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி தேசிய நாள் விருந்தில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலெக்ஸ் யாம், ஹலிமா யாக்கோப், லாரன்ஸ் வோங், ஓங் டெங் கூன் ஆகியோர் சிங்கப்பூரின் பிறந்தநாள் பாடலைப் பாடினார்கள். திருவாட்டி ஹலிமாவுக்கு இடது பக்கத்தில் நிற்பவர் அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்‌ஷீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon