ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க உத்தரவு

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் வீரர் சாந்த குமாரன் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ல் நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது எழுந்த புகாரை அடுத்து, கிரிக்கெட் விளையாட பிசிசிஐ அவருக்கு ஆயுள் காலத் தடை விதித்தது. இந்நிலையில், டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2015ல் சூதாட்டக் குற்றச் சாட்டில் இருந்து அவரை விடுவித்தது. ஆனாலும் அவர் மீதான தடையை விலக்க பிசிசிஐ மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் கேரள நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த ஸ்ரீசாந்த், தன் மீதான தடையை பிசிசிஐ நீக்க மறுப்பது அரசியல் அமைப்புச் சட்டங்களை மீறுவதற்கு ஒப்பானது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.