ஆர்சனல் ரசிகர்கள் அணிதிரள அறைகூவல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தை தொடக்கி வைக் கும் ‘சமூகக் கிண்ண’ காற்பந்து ஆட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. அதில் சென்ற பருவத்தில் செல்சியை தோற்கடித்த ஆர்சனல், செல்சியை மீண்டும் தோற்கடித்து புதிய பருவத்திற்கான தனது எண்ணத்தை தெள்ளத் தெளிவாக் கியது. அத்துடன், சென்ற பருவத்தின் பெரும் பகுதியில் ரசிகர்களின் கோபத்துக்கும் ஏச்சுப்பேச்சுக்கும் ஆளான ஆர்சனல் குழுவின் நிர்வாகி ஆர்சன் வெங்கர், புதிய காற்பந்துப் பருவத்தில் குழுவின் பின்னால் ஒற்றுமையுடன் திரண்டு இருக்கும்படி அறைகூவல் விடுத் துள்ளார்.

சென்ற பருவத்தில் எஃப்ஏ கிண்ணத்தை வென்றபோதிலும் ஆர்சனலில் நிர்வாகியாகத் தொட ரும் முடிவை வெங்கர் எடுத்தபோது அக்குழுவின் ரசிகர்கள் அவர் மீது கோபத்துடனேயே இருந்தனர். இதன் பிரதிபலிப்பாகத்தான் ஆர்சனல் பங்கேற்ற ஒரு நட்புமுறை ஆட்டத்தின்போது அவரை வசை பாடும் நோக்கத்துடன் ஆர்சனல் ரசிகர் ஒருவர் திடலுக்குள் நுழைந் தார். இந்தப் பின்னணியில் பார்க் கும்பொழுது சமூகக் கிண்ண ஆட்டத்தில், ஆர்சனல் குழு ஆட்ட முடிவில் பெனால்டி வாய்ப் புகள் மூலம் 4-1 என செல்சியை வெற்றிகொண்டது வெங்கருக்கு புதிய உத்வேகத்தை தந்திருக்கும் என்று ஏஎஃப்பி செய்தி கூறுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட வெங்கர் தமது குழுவின் ரசிகர் களை ஒற்றுமையுடன் அணி திரளும்படி அழைத்துள்ளார்.

பெனால்டி வாய்ப்புகளில் செல்சியை வீழ்த்தி சமூகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்சனல் குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்