சுடச் சுடச் செய்திகள்

3வது போட்டியில் விளையாடத் தடை

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு (படம்) அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தடை விதித்து இருக்கிறது. இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகனாக மிளிர்ந்த ஜடேஜா, எதிரணி வீரர் கருண ரத்னேவைத் தாக்கும் வகையில் அபாயகரமான முறையில் பந்தை எறிந்தார். இது குறித்து கள நடுவர்கள் ஐசிசியிடம் புகார் அளித்தனர். ஜடேஜாவும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனுடன் சேர்த்து அவரது தகுதியிழப்புப் புள்ளிகள் ஆறாக உயர்ந்தது. இதனால் அவருக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் இடம் இந்தியாவின் இன்னோர் இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon