சுடச் சுடச் செய்திகள்

வெனிசுவேலாவில் தேடப்படும் ஆயுதம் ஏந்திய கும்பல்

கராக்கஸ்: வெனிசுவேலாவில் உள்ள ஒரு ராணுவத் தளம் மீது ஆயுதம் ஏந்திய சிலர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் கள் கூறின. அத்தாக்குதலில் சுமார் 20 பேர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் ஆயுதங்களுடன் தப்பிச்சென்ற சுமார் 10 பேரை ராணுவத்தினர் தீவிரமாகத் தேடி வருவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நீடிக் கும் வேளையில் அங்குள்ள ராணுவத் தளம் தாக்கப்பட்டுள் ளது. அத்தாக்குதல் பயங்கர வாதத் தாக்குதல் என்று கூறிய அதிபர் மதுரோ, உடனடியாக செயல்பட்ட ராணுவத்தினரைப் பாராட்டினார். தாக்குதலுக்குக் காரண மானவர்களை பாதுகாப்புப் படையினர் விரைவில் கைது செய்வார்கள் என்றும் திரு மதுரோ கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon