வெள்ளப்பெருக்கில் சிக்கி வியட்னாமில் 26 பேர் மரணம்

ஹனோய்: வியட்னாமில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 15 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் சாலைகள் பழுதடைந் திருப்பதால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக் கினால் வியட்னாமில் நான்கு மாநிலங் கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்த சேத மதிப்பு 41 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் வகையில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பேரிடர் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

Loading...
Load next