மலேசியாவில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 409 பேர் கைது

கோலாலம்பூர்: அனைத்துலக பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர் கள் என்று சந்தேகிக்கப்பட்ட வெளிநாட் டினர் 409 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் ஒரு பாகிஸ்தானியர் தலைமையில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் மோசடிக் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை முறியடித்திருப்பதாகவும் போலிசார் கூறினர். பயங்கரவாத ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த புக்கிட் அமான் சிறப்புப் படை போலிசார் தலைமையில் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுமார் 200 பேர் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடிநுழைவுத் துறை, தேசிய பதிவு இலாகா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அந்த சோதனையில் ஈடு பட்டிருந்தன. வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது குடியிருப் பாளர்கள் வெளியில் காத்திருந்ததாகவும் அதிகாரிகளின் சோதனைக்கு குடியிருப் பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

Loading...
Load next