வடகொரியா மீது உலகம் பொறுமை இழந்துவிட்டது - அமெரிக்கா

மணிலா: வடகொரியா மீது ஐநா விதித்துள்ள புதிய தடைகள் அந்நாட்டின் அணுவாயுதத் திட்டத்தால் உலக நாடுகள் பொறுமை இழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார். பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டின்போது செய்தியாளர் களிடம் பேசியபோது திரு டில்லர்சன் இவ்வாறு கூறினார். வடகொரியா அதன் ஏவுகணை சோதனையை நிறுத்தாதவரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என்றும் திரு டில்லர்சன் கூறினார். அத்தகைய ஏவுகணை சோதனைகளை நிறுத்துவதன் மூலமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வடகொரியா தயாராக இருப்பதை உணர்த்த முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்யப் போவதாக வடகொரியா கூறி வருகிறது. திரு டில்லர்சன் மணிலாவில் நடந்த மாநாட்டிற்குப் பின்னர் வடகொரிய மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon