சீனாவுக்கு தூதர்களை அனுப்புகிறது பனாமா

பனாமா சிட்டி: பனாமா அர சாங்கம் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அதிகாரிகள் அடங் கிய ஒரு குழுவை இன்று சீனாவுக்கு அனுப்புகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விரு நாடுகளும் உறவை ஏற்படுத்திக்கொண்டன. பனாமா குழுவினர் பெய்ஜிங் நகரில் சீன உயர் அதி காரிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவர் என்று பனாமா வெளி யிட்ட அறிக்கை தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் சீன வர்த்தகக் குழுவினருடன் பனாமா குழு வினர் பேச்சு நடத்துவர். கடந்த ஜூன் மாதம் சீனாவுடன் பனாமா அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண் டது. தைவான்- சீனா உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பனாமாவுடன் சீனா உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.