மெட்ரோ ரயில் பயணச்சீட்டிலும் தமிழ் வேண்டும்: பொதுமக்கள்

சென்னை: தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடைபெறுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அம்மொழி பயன்படுத்தப்பட வில்லை என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை மும்மொழிக் கொள்கையை கடை பிடித்து வருகிறது. அதன்படி, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டும் வடமாநிலங்க ளில் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான வட மாநிலங்களில் இந்தி மொழியே அதிகம் பேசப்படுகிறது. ஆங்கிலம் தொடர்பு மொழி என்ற அடிப் படையில் நாடு முழுவதும் பயன் டுத்தப்படுகிறது.

இவற்றைத் தவிர அந்தந்த மாநிலங்களில் உள்ள வட்டார மொழிகளையும் இந்திய ரயில்வே பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. ரயில் பயணச்சீட்டு, முக் கிய அறிவிப்புகள் ஆகியவற்றில் இந்த மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆங்கிலம், கன் னடம் ஆகியவை மட்டும் போதும் என்றும், மும்மொழிக் கொள்கை அடிப்படையில் இந்தி தேவை யில்லை என்றும் சில அமைப்புகள் அங்கு போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்கள், பெயர்ப் பலகைகள், ஒலிப்பெருக்கித் தகவல்கள் என எங்கும் இந்தி இடம்பெறவில்லை. ஆனால் தமிழ் இடம்பெற்றுள்ளது. எனினும் பயணச்சீட்டில் ஆங்கிலத் தில் மட்டுமே விவரங்கள் உள்ளன. பயணச்சீட்டிலும் தமிழ் இடம் பெற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்று. படம்: இணையம்