சுடச் சுடச் செய்திகள்

தமிழர் பண்பாடு, கலாசாரத்தை பாஜக நாசப்படுத்துகிறது: வைகோ

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், அடக்குமுறை மூலமாக கருத்துக்களை நசுக்கி விட முடியாது என்பதை தமிழக முதல்வருக்குத் தெரியப்படுத்த விரும்புவதாகக் கூறினார். ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்ய வேண் டுமோ அதைத்தான் திமுக செயல் தலைவராகவும் உள்ள மு.க.ஸ்டா லின் செய்து கொண்டு இருப்ப தாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் நாட்டில் உள்ள விளைநிலங்களை எல்லாம் பாரதிய ஜனதா கட்சி அழித்துவிட்டதாகச் சாடினார்.

தமிழர் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றை பாஜக நாசப்படுத்திவிட்டதாகக் குறிப் பிட்ட அவர், திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என்றும் அக்கட்சி கணக்குப் போடுவதாக தெரிவித்தார். பாஜகவின் அந்த மனக்கணக்கு ஒருபோதும் நிறைவேறாது என்றார் வைகோ. “தமிழகத்தின் வாழ்வாதாரங் களை அழித்து மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் எடுப்பது போன்ற திட்டங்களைச் செயல் படுத்தி இந்தியாவுக்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்தை தேடும் நோக்கத்துடன் தமிழ கத்தைப் பாழ்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என குற்றம் சாட்டுகிறேன். இதை நாங்கள் அனைவரும் அங்குலத்துக்கு அங் குலம் கடுமையாக எதிர்ப்போம்,” என்று வைகோ ஆவேசத்துடன் குறிப்பிட்டார். அதிமுக தற்போது நடப்பவை அனைத்தும் உட்கட்சி விவகாரங் கள் என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தின் நலனுக்கும் ஜன நாயகத்துக்கும் கேடு செய்கிறது என்பதற்கு ஆயிரம் காரணங் களைத் தம்மால் சொல்ல முடியும் என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon