சுடச் சுடச் செய்திகள்

தனுஷ்: எனக்கு நான் மட்டும்தான் போட்டி

தாம் நடித்த இந்திப் படத்தின் தோல்வி மனதை பாதித்ததாகவும் வெகுவாகக் காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் தனுஷ். திரையுலகைப் பொறுத்தவரை போட்டி என்பது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ், அமலா பால், இந்தி நடிகை காஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் சில தினங்களில் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தாம் நடித்த ‘ஷமிதாப்’ படம் வெற்றி பெறாததில் தமக்கு மிகுந்த வருத்தம் என மனம் திறந்துள்ளார் தனுஷ். ஒரு படத்துக்கு வசூல் ரீதியிலான வெற்றி என்பது மிக முக்கியம், மிக அவசி யம் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகன் என்ற முறையில் எல்லா முடிவுக ளையும் சரி யாகத் தேர்வு செய்தால் அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்று குறிப்பிடுட்டுள்ள அவர், ‘ஷமிதாப்’ பும் அப்படிப்பட்ட படைப்பு என்றே தாம் கருதுவதாக கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon