சுடச் சுடச் செய்திகள்

ஸ்கூலிங், யிப் பின் சியூவின் பெயர்களில் ஆர்க்கிட் மலர்கள்

சிங்கப்பூர் பூமலை தாவரவியல் மையத்தில் உள்ள இரண்டு வகை ஆர்க்கிட் மலர்களுக்கு உள்ளூர் நீச்சல் நட்சத்திரங் களான ஜோசஃப் ஸ்கூலிங், யிப் பின் சியூ ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத் துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற ஸ்கூலிங்கையும் அதே ஆண்டில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் சிங்கப் பூருக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற யிப்பையும் கௌரவிக்கும் வண்ணம் மலர் களுக்கு அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆர்க்கிட் மலர்களுக்குப் பெயர் வைத்து கௌரவிக் கப்பட்டும் முதல் இரண்டு உள்ளூர் விளையாட்டு வீரர்கள் எனும் பெருமை ஸ்கூலிங்கையும் யிப்பையும் சேரும். யிப்பின் பெயர் வைக்கப்பட்ட ஆர்க்கிட் மலர் வெள்ளி இதழ் களுடன் மஜந்தா, ஊதா ஆகிய நிறங்களையும் கொண்டுள்ளது. ஸ்கூலிங்கின் பெயர் வைக் கப்பட்ட ஆர்க்கிட் மலர் மஞ்சள் இதழ்களுடன் பச்சை நிறத்தையும் கொண்டுள்ளது. தமது பெயர் வைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் செடியை வளர்க்க இருப்பதாக யிப் தெரிவித்துள்ளார்.

தங்கள் பெயர்கள் வைக்கப்பட்ட ஆர்க்கிட் மலர்களுடன் (இடமிருந்து வலம்) ஜோசஃப் ஸ்கூலிங், யிப் பின் சியூ, சிங்கப்பூர் பூமலையின் குழு இயக்குநர் திரு நைஜல் டேலர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon