பிலிப்பீன்சுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய ஆயதப் படை

தெற்கு பிலிப்பீன்ஸில் உள்ள மராவியில் நிலவி வரும் பதற்றநிலையின் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 100,000 வெள்ளி பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களை சிங்கப்பூர் ஆயுதப் படை விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளது. இதுகுறித்து நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப் பிட்டிருந்தார். சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த சி=130 ரக விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பிலிப்பீன்ஸை நோக்கி நேற்று அதிகாலை 6 மணிக்குப் புறப் பட்டுச் சென்றதாக அவர் தெரி வித்தார். சிங்கப்பூர் ஆயுதப் படையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன.

நிவாரணப் பொருட்களை பிலிப்பீன்ஸ் ராணுவத்தின் ஜெனரல் கிறிஸ்டொபல் ஸரகோசாவிடம் (இடமிருந்து இரண்டாவது) ஒப்படைக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் கர்னல் லீ குவான் சுங் (நடுவில்). படம்: சாவ்பாவ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்